மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிபர்ஸ்ஆர்க்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
தமிழ்த்தாய் வாழ்த்து - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையே பலரும் அறிந்திருப்பார்கள். பல விழாக்களிலும் விழாக்களைத் தொடங்க மேற்கண்ட தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையோ, கடவுள் வாழ்த்துப் பாடல்களையோ பாடி விழாவைத் தொடங்குவர்.
பலரும் அறியாத, சமயச் சார்பற்ற, தமிழின் பழமையையும், பெருமையையும், தமிழர் பண்பாட்டையும் எடுத்தியம்பும் வாழ்த்துப்பாடல் ஏதாவது சொல்லுங்களேன் என்று பேரா.குணா தமிழ் குணசேகரன் அவர்களிடம் கேட்பவர்களுக்கு அவர் பரிந்துரை செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இதுதான். இதனை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் பாடியுள்ளார். இப்பாடல் கனிச்சாறு என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தாய் வாழ்த்து
********************
அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே ! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!
சிந்தா மணிச்சுடரே!
செங்கை செறிவளையே!
தந்த வடமொழிக்கும்
தாயாகி நின்றவளே!
சிந்து மணற்பரப்பில்
சிற்றில் விளையாடி
முந்தை எகுபதியர்
மூத்த சுமேரியத்தார்
செந்திரு நாவில்
சிரித்த இளங்கன்னீ !
சிந்துங் கலைவடிவே !
சீர்த்த கடற்கோளில்
நந்தாக் கதிரொளியே!
நாடகத்துப் பண்ணியலே !
வந்த குடிமரபோர்
வாழ்த்தி வணங்குவமே
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக