மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சிபர்ஸ்பெண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
"இன்பத்தை கருவாக்கினாள் பெண், உலகத்தில் மனிதனை உருவாக்கினாள்
பெண், விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் விலையற்ற செல்வம் பெண்'
என்ற பாடல் வரிகள் பெண்ணின் பெருமையை விவரிக்கின்றன. மனைவி, தாய், குடும்பத் தலைவி என பல பரிணாமங்களாக பெண்கள் திகழ்கின்றனர்.
"உடல்வலிமை ஆண்களுக்கு பலம் என்றால்,
மன வலிமை பெண்களுக்கு பலம்'
என வல்லுநர்கள் கூறுகின்றனர். பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தோடும், பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளை பாரட்டும் வகையிலும் ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இன்னும் கனவு தான் :
தற்போது பார்லிமென்டிலும், மத்திய அமைச்சரவையிலும் ஏறத்தாழ 10 சதவீதத்தினர் மட்டுமே பெண்களாக உள்ளனர். நாட்டில் ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் நான்கு மாநிலத்தில் முதல்வராக பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் எதிர்ப்பின் காரணமாக இது நிறைவேறாத கனவாகவே உள்ளது. பெண்களுக்கு கிடைக்க வேண்டிய இந்த உரிமையை சிலர் சலுகையாக நினைத்து மறுப்பது வேதனைக்குரியது.
அசுர வளர்ச்சியில் பெண்கள் :
இன்றைய உலகில் ஆணுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளில் கால் பதித்துள்ளனர். விண்வெளி வீராங்கனையாக, டாக்டராக, இன்ஜினியராக, பைலட்டாக பெண்கள் திகழ்கின்றனர். "அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு' என்ற காலம் மாறி, இன்று பெண்கள் படிக்கவும், வேலை பார்க்கவும் பல்வேறு நாடுகளுக்கு செல்கின்றனர்.
எப்போது நிற்கும் :
பெண்கள் முன்னேற்றமடைந்தாலும், அவர்களுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை விட, பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து விடும் என்கின்றனர் குற்றவியல் வல்லுனர்கள். பல வன்முறை சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரதட்சிணை, பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, சிசுக்கொலை என பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு பல வடிவங்கள்.
எப்படி தடுப்பது :
பெண்கள் மீதான வன்முறையை முற்றிலுமாக தடுப்பதற்கு, குற்றவாளிகளுக்கு பல்வேறு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும். இதற்கு அதிகார மையங்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் இது சாத்தியம். ஆப்ரிக்க நாடான ருவாண்டாவில் பெண்களுக்கு பார்லிமென்ட்டில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு 49 சதவீதத்தினர் பெண்களாக உள்ளனர். பின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் பெண்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்காவிட்டாலும், பார்லிமென்ட் உறுப்பினர்களில் 37 சதவீதத்தினர் பெண்கள். இந்நிலை நம்நாட்டிலும் வர வேண்டும்.
நன்றி தினமலர் பேப்பர்........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக