வியாழன், 31 ஜூலை, 2014

தமிழரும்-கடலும்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
      உலகின் முதல் கப்பலையும் மிகப் பெரிய கப்பல்படையும் வைத்திருந்தவன் தமிழன்.
தென் பசிபிக் மாகடலில், ஆஸ்திரேலியா கடல் பகுதியில் ஆழக்கடல் அகழ்வாராய்ச்சியில் மிகப்பெரிய சரக்குகப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்கப்பலை ஆராய்ந்து பார்த்ததில் அது 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும் அக்கப்பல் தமிழர்களுடையது என்றும் தெரிவிக்கப்படுகிறது. உலகில் உள்ள கப்பல் மற்றும் கப்பல் சார்ந்த துறைகளுக்கு தமிழிலிருந்து மருவிய பெயர்களை காண முடிகிறது. நாவாய் மருவி நேவி (Navy) என்று ஆங்கிலத்தில் அழைக்கபெறுகிறது.
தமிழில் கடலுக்கு மட்டுமே 200க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாக கூறப்படுகிறது. (எ-கா) அரலை, அரி, அண்மைக்கடல், அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழக்கடல், ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கரைக்கடல், காயம், கலி, கார்கொள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நித்தம், நீந்து, நீரகம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை என கடல் என்ற சொல்லுக்கு இது போன்ற பல சொற்களை கடல் பழங்குடிகளான நம் மீனவ மக்களிடமும் நம் இலக்கியங்களிலும் அறியலாம்.
உலக கடல் அகழாய்வில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கிரகாம் ஹான்காக் பூம்புகார் கடலில் ஆரய்ச்சி செய்து பூம்புகார் என்ற நகரம் கடலில் மூழ்கியுள்ளதையும், இவை 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்றும் கூறியுள்ளார். இவர் கடலில் புதையுண்ட பூம்புகாரின் அறிய ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளார். மற்றொரு இங்கிலாந்து அறிஞர் கிளன் மில்னே இதையே கூறுகிறார். இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைகழகம் உறுதி செய்துள்ளது.
தமிழன் உலகெங்கும் பரவி இருந்தான் என்பதற்கு பல்வேறு வரலாற்று சான்றுகளை காண முடியும். “கடலுக்கு அப்பால் உள்ள நிலங்களைக் கண்டுபிடித்து தொழிலையும் நாகரிகத்தையும் உலகில் முதன்முதலில் வளர்த்தது தமிழர்களே. இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் 1,300 தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன” என்கிறார் கடல்சார் தமிழியல் ஆய்வாளர் திரு. ஒடிசா பாலு அவர்கள். (எ-கா) தமிழா-மியான்மர், சபா சந்தகன் – மலேசியா, கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா, கடாலன் – ஸ்பெயின், நான்மாடல், குமரி,- பசிபிக் கடல், சோழா, தமிழி பாஸ் –மெக்சிகோ, திங் வெளிர்- ஐஸ்லாந்து, கோமுட்டி-ஆப்ரிக்கா என்பவை சில உதாரணங்கள்.நண்பர்களே! நம்ம வரலாறு எத்தகையது என்று எண்ணிப்பாருங்கள்.

வெண்டைக்காயின் மருத்துவ குணம் !

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.
      பெண்கள் நாட்டின் கண்கள் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
வெண்டைக்காயின் மருத்துவ குணம் !
வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ். இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப் பொடியாகப் பயன்படுத்துகிறார்கள்
கொழுப்பை கரைக்கும் :
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
ஆண்மையை அதிகரிக்கும் :
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
நன்மை தரும் பாக்டீரியா :
இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப்படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

வெண்டைக்காயில் உயர்தர லேக்ஸடிவ் (laxative.) உள்ளது. இது உடல் நலனுக்கு ஏற்றது. அல்சரை கட்டுப்படுத்துகிறது. வாய்வு கோளாறுகளை தடுக்கிறது. வெண்டைக்காயை நன்றாக வேக வைத்து அந்த தண்ணீரை கூந்தலில் தடவி வர கூந்தல் உதிர்தலை தடுக்கும்.
இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

பயன் தரும் குறிப்புகள்

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.பெண்கள் நாட்டின் கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
           பயன்தரும் குறிப்புகள் பற்றி காண்போம்.
       1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

பெண்களுக்கு உதவும் எண்கள்

மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம். 
           பெண்கள் நாட்டின் கண்கள் - வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். 
 இங்கு பெண்களுக்கான பாதுகாப்பு உதவி எண்கள் பதிவிட்டு உள்ளோம்.
ஆனால் பேருந்து ஓட்டுநர்களோ,நடத்துநர்களோ பெண் பயணிகளிடம் தவறான அணுகுமுறையை கையாண்டால் யாருக்கு புகார் அளிப்பது? விவரம் அறிந்தவர்கள் கொடுத்து உதவலாமே?
 
பெண்களுக்கு உதவும் எண்கள் !
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது. எனவே பெண்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு குரல் கொடுக்கவும் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகிறது 

           அவற்றின் சில உதவி எண்கள்...
பெண்கள் அவசர உதவி எண் : 1091, 044-23452365.
பெண் குழந்தைகள் உதவி எண் : 1098.
வயதான பெண்கள் உதவி எண் : 1235.
வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் : 044-28551155, 044-2504568.
ஆதரவற்ற பெண்களுக்காக : 044-26530504, 044-2650599.
வாடகை தாய் பற்றி தெரிந்துகொள்ள : 044-26184392, 91713 13424.
பெண் ரயில் பயணிகளுக்கு : 044-2533999, 99625 00500.
ரேக்கிங் பிரச்னைகளுக்கு : 95000 99100 (எஸ்எம்எஸ் எண்)

04423452365 ,1091
இந்த எண், தமிழக அரசின் பெண்கள் அவசர உதவி எண். திடீர் ஆபத்துக்கள் வரும்போது பெண்கள் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளலாம். எங்கோ ஓர் இடத்தில் தனித்துவிடப்பட்டு விட்டாலும் அல்லது தங்க இடமில்லாதபோதும் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்!

 இந்த எண் எடுக்கப்படவில்லை என்றால் 044-23452365 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்!
 பெண் குழந்தைகள் என்றால் 1098 என்கிற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்! 
பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் வயதான பெண்கள் என்றால் 1253-ஐ தொடர்புகொள்ளலாம்.
04428551155
குடும்பத்தில் கணவன் மூலம் வன்கொடுமைக்கு
ஆளானாலோ அல்லது வேலை செய்யுமிடத்திலோ, கல்லூரியிலோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலோ 044-28551155 என்கிற தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் எண்ணுக்கும், 044-25264568 என்ற எண்ணுக்கும் அழைத்து ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளுவதோடு புகாரும் கொடுத்து உங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வும் காணலாம்.

04426530504, 26530599
மனரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை, ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க 044 - 26530504, 044-26530599- என்கிற எண்களைத் தொடர்புகொள்ளலாம். 

இது, சென்னை முகப்பேரிலுள்ள பெண்களுக்கான விழுதுகள் தொண்டு நிறுவனத்தின் எண்! மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
04426184392, 9171313424
வாடகைத் தாய்களாகப் போய் புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள் 044-26184392, 9171313424 என்கிற உலக வாடகைத் தாய்களின் உரிமைகள் அமைப்பு எண்ணைத் தொடர்புகொண்டு வாடகைத்தாய் என்றால் என்ன? அவர்களுக்கான உரிமைகள், விதிமுறைகள் என்ன என்பனவற்றை அறியலாம்.

04425353999, 90031 61710
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் புகார் தெரிவிக்க ரயில்வே போலீஸ் நம்பரான 044-25353999, 90031 61710, 99625 00500 எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

95000 99100
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும்,உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

04424749002, 04426744445
ஆட்டோவில் அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் 044-24749002 மற்றும் 044-26744445 என்கிற எண்களைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.

04428592828, 94454 64748
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்று உணர்ந்தால் மாநில நுகர்வோர் புகார்களுக்கான டோல் ஃப்ரீ எண் 180011400, 94454 64748, 72999 98002, 72000 18001, 044- 28592828 ஆகிய எண்களைத் தொடர்புகொண்டு புகார் கொடுப்பதோடு ஆலோசனைகளையும் பெறலாம்.

93833 37639
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்துவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு 93833 37639 என்கிற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.


புதன், 30 ஜூலை, 2014

முழு உடல் பரிசோதனை!

 மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
              பெண்கள் நாட்டின் கண்கள் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

மது உடலில் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ள முழு உடல் பரிசோதனை தேவைப்படுகிறது. 30 வயதை கடக்கும்போது

மூன்று வருடத்துக்கு ஒரு முறையும், 40 வயதை கடக்கும்போது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், 50 வயதை கடந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் செல்லும்போது உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து, பதில் எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற வகையாக இருக்கும்.

கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாக அவை இருக்கும். நீங்கள் வேகமாக அதற்கு விடையளித்துவிடலாம்.

அந்த பதில்களை வைத்துத்தா உங்கள் உடலில் கூடுதல் கவனம் எதற்கு செலுத்தவேண்டும் என்று நிர்ணயிப்பார்கள். கூடுதல் பரிசோதனைகளும் செய்வார்கள். நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள்,

ஒத்து கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களை குறிப்பாக எழுதிவைத்து அவர்களிடம் கூறவேண்டியதிருக்கும். பாரம்பரியமாக ஏதாவது நோய்கள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அதையும் நினைவுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

பரிசோதனைக்கு முந்தைய நாள் நீங்கள் மனதளவில் தயாராகவேண்டும். எப்படி தெரியுமா? இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகக் தூங்கி எழ வேண்டும். காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

பரிசோதனையில் சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டீ.எல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிட வேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் வயிறு காலியாக இருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.

வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும் பெண்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகளையும்,

நீர்க்கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும் தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=14670#sthash.QXMNqBE3.dpuf
மது உடலில் என்னென்ன பாதிப்புகள் இருக்கிறது என்பதை முழுமையாக உணர்ந்துகொள்ள முழு உடல் பரிசோதனை தேவைப்படுகிறது. 30 வயதை கடக்கும்போது

மூன்று வருடத்துக்கு ஒரு முறையும், 40 வயதை கடக்கும்போது இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும், 50 வயதை கடந்து விட்டால் வருடத்திற்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.

முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் செல்லும்போது உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து, பதில் எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற வகையாக இருக்கும்.

கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாக அவை இருக்கும். நீங்கள் வேகமாக அதற்கு விடையளித்துவிடலாம்.

அந்த பதில்களை வைத்துத்தா உங்கள் உடலில் கூடுதல் கவனம் எதற்கு செலுத்தவேண்டும் என்று நிர்ணயிப்பார்கள். கூடுதல் பரிசோதனைகளும் செய்வார்கள். நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்து கொண்ட அறுவை சிகிச்சைகள்,

ஒத்து கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களை குறிப்பாக எழுதிவைத்து அவர்களிடம் கூறவேண்டியதிருக்கும். பாரம்பரியமாக ஏதாவது நோய்கள் உங்கள் குடும்பத்தில் இருந்தால் அதையும் நினைவுப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

பரிசோதனைக்கு முந்தைய நாள் நீங்கள் மனதளவில் தயாராகவேண்டும். எப்படி தெரியுமா? இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகக் தூங்கி எழ வேண்டும். காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு செல்ல வேண்டும்.

பரிசோதனையில் சர்க்கரை, கொலஸ்ட்ரால், நல்ல கொழுப்பு ஹெச்.டீ.எல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிட வேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம். அதனால்தான் வயிறு காலியாக இருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.

வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும். தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப் பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும் பெண்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகளையும்,

நீர்க்கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும் தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும். சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்.
- See more at: http://viyapu.com/news_detail.php?cid=14670#sthash.QXMNqBE3.dpuf
                    முழு உடல் பரிசோதனை! அனைவரும் செய்யுங்க!.
கூட்டுக் குடும்பங்கள் பெருகி இருந்த அந்த காலக் கட்டத்தில், ஒருவருக்கு ஏதேனும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்பட்டால், வீட்டில் உள்ள மூத்தவர்களின் கைவைத்தியமும், முதலுதவியும், அக்கம்பக்கத்தினரின் அணுகுமுறையும்... ஒடுங்கி இருந்தவரை உற்சாகமாகத் துள்ளி எழவைத்துவிடும். மேலும், வீட்டுக்கு ஒரு குடும்ப டாக்டர் என்ற ஒரு நல்ல அமைப்பால், தனிப்பட்ட மனிதர்களின் உடல் மற்றும் உளவியல்ரீதியான பிரச்னைகள் முழுவதையும் அவ்வப்போதே தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இன்றோ குடும்ப அமைப்பே மாறி, கூட்டுக் குடும்பங்களே இல்லாத நிலைமை. இதனால், 'குடும்ப மருத்துவர்’ என்பதே மறைந்துவருகிறது.
 தலைவலி வந்தால்கூட மூளை சிறப்பு மருத்துவரையும், நெஞ்சுவலி என்றால் இதய சிகிச்சை நிபுணரையும் தேடி ஓடி, ஆயிரக்கணக்கில் செலவு செய்வது வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு மருத்துவரும் அவர்கள் துறை சம்பந்தப்பட்ட நோய்களை மட்டும் சிறப்பாகக் கவனித்துவிட்டு, மற்றவற்றை விட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு உடல் உறுப்பின் பாதிப்புக்கும் அந்தந்தத் துறை மருத்துவரை அணுகவேண்டிய கட்டாய நிலை.
இரண்டு மணி நேரம் காத்திருக்கும் நோயாளியை மேலும் ஒரு மணி நேரம் பரிசோதித்து முழுவதையும் பார்ப்பதற்கு மருத்துவருக்கும் நேரம் இல்லை; அவ்வாறு முழுப் பரிசோதனைக்காகக் காத்திருக்க நோயாளிகளுக்கும் அவகாசம் இல்லை.
'முழு உடல் பரிசோதனைக்குப் பணம் அதிகம் தேவைப்படுமே. வியாதியே இல்லாதப்ப, எதற்கு செக்கப்?’ என்கிற பொறுமல்களுக்கும் குறைவே இல்லை.
ஆரோக்கியமான வாழ்வுக்கு முழு உடற் பரிசோதனை மிகவும் முக்கியம். பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்து அவர்களுக்கு எளிய வாழ்க்கை முறை மாற்றம் மூலம் உயிர் காப்பது முழு உடல் பரிசோதனைத் திட்டம்தான்.
முழு உடல் பரிசோதனை பற்றி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு மூத்த உதவிப் பேராசிரியர்           த.ரவிக்குமார் விரிவாகப் பேசினார்.
யாரெல்லாம் செய்து கொள்ளவேண்டும்?
  அனைவரும் செய்துகொள்ளலாம். உயிர் மேல் அக்கறையும் குடும்பத்தின் மேல் பாசமும், உடலின் நலனைப் பாதுகாக்கவும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
அதிகம் செலவாகுமா?
  முழு உடல் பரிசோதனையை உடல் நலன் காக்க செய்யப்படும் நல்ல முதலீடாகக்கூடக் கருதலாம். முன்பே கவனிக்காமல்விட்டுவிட்டதால், நோய் வந்த பிறகு ஏற்படும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம், வலி, வேதனை இவற்றுடன் ஒப்பிடும்போது முதலிலேயே செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு செய்வது மிகக் குறைந்த செலவுதான்.
  அரசுப் பொது மருத்துவமனைகளில் 250 ரூபாய்க்கு செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் 3,500 முதல் 50,000 ரூபாய் வரை மினி பரிசோதனை, மாஸ்டர் பரிசோதனை, இதயப் பரிசோதனை, இதயம் தொடர்பான பரிசோதனை, குடல், வயிறு, மூளை, நரம்பு, எலும்புப் பரிசோதனை மற்றும் சிறப்புப் பரிசோதனை, அதிசிறப்புப் பரிசோதனை, எனப் பல்வேறு பேக்கேஜ்களில் கிடைக்கின்றன. உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.
  சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முழு உடல் பரிசோதனைக்கானக் கட்டணத்தையும் தந்துவிடுகின்றன.
யார் யாருக்கு என்னென்ன பரிசோதனை?
  பிறந்த  பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரும் கோளாறுகள், மரபணு மூலமாக வரும் வியாதிகள் போன்றவற்றைக் கண்டறிய என ஹெல்த் செக்கப் பேக்கேஜ்கள் உள்ளன.
  பள்ளியில் சேருவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு நோய்த் தொற்று உள்ளதா? தடுப்பு ஊசியால் தடுக்கப்பட வேண்டிய நோய்கள் ஏதேனும் வந்துள்ளனவா? பல்லில் சொத்தை, சொறி சிரங்கு, அலர்ஜி, தேமல், தோல் நோய்கள், காது, மூக்கு, தொண்டை, டான்சில், அடினாய்டு நோய்கள், மூளை வளர்ச்சி, கண் பார்வைத் திறன், படிப்புத் திறன் குறைபாடுகள், இதயம், நுரையீரல், வயிறு, குடல் நோய்கள், சிறு நீரக நோய் தொற்றுகள் போன்றவை பற்றித் தெரிந்துகொள்ளலாம். மேலும் உடல் வளர்ச்சி சீராக உள்ளதா என்பதையும் அறியலாம்.
  பள்ளி, கல்லூரி மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையைச் சேர்ந்தவர்கள், புதிதாக வேலைக்குச் சேருபவர்களுக்கு என்றே சிறப்பு முழு உடல் பரிசோதனைகளும் கிடைக்கின்றன.
  பல்வேறு  நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பரிசோதனைக்கான செலவுத் தொகையை முதல் மாத சம்பளத்திலேயே கொடுத்துவிடுகின்றன. ஆனாலும் பலர் எந்த சோதனைகளும் செய்யாமலேயே மருத்துவர்களிடம் (பொய்) சான்று பெற்று வருவதும் வேதனை. இது நம் உடலுக்கு நாமே வேட்டு வைப்பதுபோல்தான்.
  போலீஸ், ராணுவம், ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்பவர்கள், மருத்துவப் பணியாளர்கள் வருடாவருடம் உடல் நலத் தகுதிச் சான்று பெறவேண்டியது கட்டாயம்.                                                            
முழு உடற்பரிசோதனை செய்துகொள்ளக் கால இடைவெளி என்ன?
30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மூன்று வருடத்துக்கு ஒரு முறையும்,
40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு வருடத்துக்கு ஒரு முறையும்,
50 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒரு வருடத்துக்கு ஒரு முறையும் முழு உடல் பரிசோதனை செய்வது மிகவும் அவசியம்.
பரிசோதனைக்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ன?
  முழு உடல் பரிசோதனைக்கு நீங்கள் முன்பதிவு செய்வது அவசியம்.
  உங்களிடம் ஒரு கேள்வித்தாளைக் கொடுத்து சில கேள்விக்கான பதில்களை எழுதச் சொல்வார்கள். அவை பெரும்பாலும் ஆம் அல்லது இல்லை என்பது போன்ற பதில்களாக இருக்கும்.
  கண், காது, மூக்கு, தொண்டை, தோல், பசி, தூக்கம், பல், நாக்கு, மார்பு, இதயம், வயிறு, பிறப்பு உறுப்பு நோய்கள், உடலில் மதமதப்பு, மரத்துப்போதல், வலி, கூச்சம், பெரியதாகும் மச்சம், ஆறாத புண்கள் பற்றிய கேள்விகளாகவும் இருக்கும். எளிதில் விடையளிக்கக் கூடியவையே!
சந்தேகம் இருந்தால் கேட்டுவிட்டுப் பதில் எழுதுங்கள். அந்தக் கேள்விகளை வைத்துத்தான் உங்கள் உடலில் எந்த இடத்தில் என்ன நோய் வர வாய்ப்பிருப்பதாக நினைக்கிறார்களோ... அதற்கான கூடுதல் பரிசோதனைகள் செய்வார்கள்.
  வீட்டில் உங்கள் பெற்றோரிடம், நீங்கள் சிறு வயதில் போட்டுக்கொண்ட தடுப்பு ஊசி, செய்துகொண்ட அறுவை சிகிச்சைகள், ஒத்துக்கொள்ளாத மருந்துகள், இதற்குமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அது பற்றிய விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். மேலும், உங்கள் வீட்டில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மாரடைப்பு, வலிப்பு, சில பரம்பரை வியாதிகளான ஹீமோஃபீலியா போன்றவை இருந்தால், அதுபற்றிய விவரங்களையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
  சில மருத்துவமனைகளில் நீங்கள் வரும்போதே சிறுநீர், மலம் போன்றவற்றை எடுத்துவரச் சொல்வார்கள். பரிசோதனைக்குத் தேவைப்படும் அளவுகளை அவர்களிடம் கேட்டு அதன்படி எடுத்துச் செல்லுங்கள்.
மனதளவில் எப்படித் தயாராவது?
  இரவு சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கி எழவேண்டும்.  
  காலையில் பல் துலக்கியதும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
  பரிசோதனை முடியும் வரை டீ, காபி, பால், உணவு எதுவும் சாப்பிடக் கூடாது. வெறும் வயிற்றோடுதான் பரிசோதனைக்கு வர வேண்டும்.
பரிசோதனையின்போது உணவு வயிற்றில் இருக்கலாமா?
  சர்க்கரை, கொலஸ்ட்ரால்,  நல்ல கொழுப்பு ஹெச்.டீஎல், கெட்ட கொழுப்பு எல்.டீ.எல் மற்றும் வீ.எல்.டீ.எல், ட்ரைகிளிசரைடு போன்றவற்றை அளவிடவேண்டும். உணவு வயிற்றில் இருந்தால், அளவு மாறி அது வியாதியால் ஏற்பட்ட பாதிப்பா அல்லது சாப்பிட்ட உணவா எனக் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும், பித்தப் பையில் இருக்கும் பித்த நீர், உணவைச் செரிமானம் செய்ய வயிற்றுக்குள் சென்றுவிடும்.  பித்தப்பை காலியாக இருந்தால், அதில் கல் ஏதாவது இருக்கிறதா என்பதும் தெளிவாகத் தெரியாது.
 இரைப்பைக்குக் கீழே கணையம் இருப்பதால், உணவு இரைப்பையில் இருந்தால் கணையம் தெரியாது. சர்க்கரை நோய்க்குக் கணையத்தில் ஏற்படும் கல், கட்டி, அழற்சி ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
 பரிசோதனைகளுக்கு முன்பு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்?
 வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்திருந்தால் மட்டுமே வயிற்றின் உள் உறுப்புகளை ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.
 தண்ணீர் குடித்ததும், சிறுநீர்ப்பையில் சிறுநீர் நிரம்பி இருந்தால் மட்டுமே ஆண்களுக்குப் ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏற்படும் வியாதிகளையும்; பெண்களுக்கு, கர்ப்பப்பை குறைபாடுகளையும், நீர்க்கட்டிகள், புற்றுநோய்க் கட்டிகள் ஆகியவற்றையும்  தெளிவாக ஸ்கேன் செய்து பார்க்க முடியும்.
 சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்களுக்குச் சிறுநீர் கழித்த பிறகும் உள்ளே சிறுநீர் தேங்கி இருக்கிறதா, எந்த அளவில் அது இருக்கிறது என்பன பற்றி தெரிந்துகொள்ள மீண்டும் ஒரு முறை ஸ்கேன் செய்து பார்ப்பார்கள்
 ரோமம் அகற்றுவது நல்லதே!
 மார்பகப் புற்றுநோய் மற்றும் டி.பி கிருமித் தாக்குதல், மயிர்க்கால் நோய்த் தாக்குதல், நெறி கட்டுவதைப் பரிசோதித்தல் போன்றவற்றுக்கும் முடி இல்லாது இருப்பது நலம்.
  அக்குளில் உள்ள தோல் பகுதியில் இருக்கும் கறுப்பான வரிகள், இன்சுலின் எதிர்ப்பு உடலில் உருவாகி உள்ளதைக் காட்டும். இதனால் அக்குள் மற்றும் மறைவுப் பகுதிகளில் உள்ள ரோமங்களை நீக்கிவிடுவது நல்லது.
  பிறப்பு உறுப்பு அருகில் சீழ், நெறி, புண், தழும்பு ஆகியன இருந்தால், அது பால்வினை நோயாகவோ, வேறு தொற்று நோயாகவோ இருக்கலாம். அவற்றைப் பரிசோதிக்கவும், குடலிறக்கம் இருந்தால் அதைப் பரிசோதிக்கவும் முடி நீக்கவேண்டியது அவசியம்.
 மார்பில் நிறைய முடி இருப்பது இ.சி.ஜி  மற்றும் டிரெட்மில் பரிசோதனைகளுக்கு இடையூறாக இருக்கும். அவற்றையும் அகற்ற வேண்டி வரலாம்.
 பரிசோதனைக்கு வரும் தினத்தன்று கடைப்பிடிக்க வேண்டியவை?
 கோட், சூட், டை, ஷூ, சாக்ஸ், ஜீன்ஸ், இறுக்கமான பனியன் போன்ற ஆடைகளைத் தவிர்த்து எளிதில் கழற்றக்கூடிய தளர்வான ஆடைகள் அணிவது நல்லது. கையில் இரண்டு கைக்குட்டைகள் வைத்துக் கொள்ளவேண்டும்.  
  பெண்கள் சேலை அல்லது சுடிதார் அணிவது வசதியானது.
  மாதவிலக்கு சமயங்களில் பரிசோதனையைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய முடியாமல் வேறு ஒரு நாள் திரும்பச் செல்ல நேரிடும்.
  பரிசோதனைக்கு முந்தைய இரவு விருந்தும் வேண்டாம்; பட்டினியும் வேண்டாம்.  
  மது, புகை, வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்றவற்றைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். புகைபிடித்த அடுத்த 30 நிமிடங்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகும்.
  அளவான சாப்பாடும் நல்ல தூக்கமும் தேவை.
  நாக்கைப் பரிசோதித்து ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள், சாதாரணப் புண், புற்று நோய், எய்ட்ஸ், டைஃபாய்டு, தைராய்டு குறைபாடுகள், மூளை பாதிப்புகள், ஈறு, பல்லில் ஏற்பட்டுள்ள நோய்கள், எச்சில் சுரப்பி சம்பந்தமான நோய்கள் என 40-க்கும் மேற்பட்ட நோய்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால், வெற்றிலை, பாக்கு, பான்பராக் போன்ற பொருட்களை உபயோகித்தால், வியாதிகளைக் கண்டு பிடிக்க முடியாமல் போகும்.
  உதட்டைப் பரிசோதித்து இதயம், நுரையீரல், வெண் புள்ளிகள், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடுகள் ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும். எனவே பரிசோதனைக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போட வேண்டாம்.
  அதிக வாசனை உள்ள பவுடர், சென்ட், பூக்கள் பயன்படுத்த வேண்டாம்.
  நகத்தில் வெடிப்பு, அதன் வளைவுகள், புள்ளிகள், கோடுகள், நிறம், குழிகள் போன்றவற்றைப் பரிசோதித்து, என்ன வியாதி எனக் கண்டுபிடிக்க முடியும். அதனால், நகச் சாயமும், மருதாணியும் பரிசோதனையின்போது வேண்டாம்.
  செல்போனை சைலன்ட் மோடில் வைத்துவிடுங்கள் அல்லது அணைத்தும்விடலாம்.
  உங்கள் உடலில் எங்கேனும் பெரியதாகி வரும் மச்சம், தழும்பு, மரு, படை, சிவப்புத் திட்டு, தடிப்பு, கட்டி, அரிப்பு, கண்கட்டி, முகத்தில் தேமல், நகச்சுத்தி, நீண்ட நாட்களாக ஆறாத புண், அவ்வப்போது வந்து போகும் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, நாவறட்சி, கண் இருண்டு போதல் எனத் தொந்தரவுகள் ஏதேனும் இருந்தால், குறித்து வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சொல்லுங்கள்.
  நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகள் ஏதாவது இருந்தால், அது பற்றிய குறிப்புகளையும் சொல்லுங்கள்.
என்னென்ன பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
ரத்தம்  
  ரத்த வகை எது எனப் பரிசோதிப்பார்கள். அத்துடன் ஆர்.எச். பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் என கண்டுபிடிப்பார்கள். இந்த விஷயங்கள் உயிர் காக்கும் தகவலாகும். ஒருவருக்கு வாழ்நாளில் ரத்தப் பிரிவு மாறவே மாறாது என்பதால், நினைவில் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.
 ரத்தசோகை உள்ளதா என அறிய, ஹீமோகுளோபின் அளவு, ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை, அலர்ஜி இருந்தால் காட்டும் ஈஸினோஃபில் எண்ணிக்கை, ரத்தத்தை உறையவைக்கும் தட்டணுக்களின் எண்ணிக்கை, ரத்தம் கசியும் நேரம், உறையும் நேரம், ரத்த அணுக்கள் வளர்ச்சி, உருவம், நிறம், அளவு, அவற்றில் உள்ள குறைபாடுகள், ரத்த நோய்களான ரத்தசோகை முதல் ரத்தப் புற்றுநோய் வரை ஒரே பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.
  மலேரியா, யானைக்கால் வியாதிகள் பரப்பும் கிருமிகள் உள்ளனவா என்பதையும் அறியலாம்.
  ரத்த மாதிரியை வைத்து, கல்லீரல், சிறு நீரகங்கள், தைராய்டு, அட்ரீனல், கணையம், பிட்யூட்டரி, ஆண், பெண் ஹார்மோன் வியாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ரத்த அழுத்தம்
  ரத்த அழுத்தம் 120/80 மிமி மெர்க்குரி அளவு சரியான அளவாகும். 130/90க்கு மேல் இருந்தால் உணவில் உப்பைக் குறையுங்கள். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்த்து மீண்டும் பரிசோதித்துப் பாருங்கள். குறையவில்லை என உறுதிப்படுத்திய பிறகு, வாழ்க்கைமுறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலமும் மாத்திரைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம்.
 இதய எக்கோ பரிசோதனையில் பிறவி இதய வியாதிகள், இடையில் ஏற்பட்ட வால்வுக் கோளாறுகள், மாரடைப்பிற்குப் பிறகு இதயம் வேலை செய்யும் திறன், இதய சுவர்களில் வீக்கம், சுருங்கிவிரியும் தன்மையில் உள்ள குறைபாடுகள் போன்றவற்றை அறியலாம்.
ரத்தத்தில் கொழுப்பின் அளவுகள்
 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் (200-க்கு கீழ்), நல்லகொழுப்பான ஹெச்.டீ.எல்(60-க்கு மேல்) கெட்டக் கொழுப்பான எல்.டீ.எல். (100-க்குகீழ்), ட்ரைகிளிசரைடு (150-க்கு கீழ்) போன்றவற்றை அளவிடுவார்கள். இவற்றின் அளவு அதிகமாக இருந்தால், மீன் எண்ணெய் (ஒமேகா 3 கொழுப்பு சத்து கொண்டது, அல்லது பிளாக்ஸ் சீட் உணவில் சேர்த்துக்கொள்ள ஆலோசனை கூறுவார்கள்.
சிறுநீர்
  சிறுநீர்ப் பரிசோதனையில், அளவு, நிறம், தெளிவு, கலங்கல், ரத்தக் கசிவு, கிருமித் தொற்று, சிறுநீரக வியாதிகள், சிறுநீர்ப்பை வியாதிகள், கல், புற்றுநோய் வரை தெரிந்துகொள்ளலாம்.
மலம்
மலப் பரிசோதனையில், வயிற்றுப் புழுக்கள், அவற்றின் முட்டைகள், அமீபா, டைபாய்டு, காலரா  நோய்த் தாக்குதல், சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆசன வாய் நோய்கள், தொற்றுக்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
எக்ஸ்ரே
  நுரையீரல் நோய்களான நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, ரத்தம், நீர், சீழ், காற்று உள்ளே கோர்த்து மூச்சடைப்பை ஏற்படுத்துதல், இதய வீக்கம், இதய வால்வு நோய்கள், இதயச் சவ்வு, கட்டி, புற்று நோய்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நோய்கள் பற்றி தெரிந்து கொள்ள லாம்.
இ.சி.ஜி.
  இ.சி.ஜி. என்னும் இதயச் சுருள் வரைபடம் மூலம், இதயத் துடிப்பின் எண்ணிக்கை, கால அளவு, மாரடைப்பு, இதயச் செயலிழப்பு, இதயத் தசை வீக்கம், மின்னோட்ட அமைப்பில் ஏற்படும் கோளாறுகள் என சுமார் 120 வகையான வியாதிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
உயரம்
  உடலின் உயரத்தைப் பரிசோதித்து, சரியான வளர்ச்சி, உயரக் குறைபாடு, மிக அதிக உயரம் (அ) குறைந்த உயரம் உள்ளவர்களுக்கு, வேறு ஏதேனும் ஹார்மோன் குறைபாடுகள் காரணமா என்று அறியலாம்.
எடை
  உயரத்தை சென்டி மீட்டரில் குறித்துகொள்வார்கள். அதிலிருந்து 100 ஐக் கழித்தால் வருவது உங்கள் ஆரோக்கியத்திற்கான எடை. அத்துடன் அதிகபட்சமாக 5 கிலோ கூடக் குறைய இருக்கலாம். உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ, மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும் ஆலோசனை தருவார்கள்.
  பி.எம்.ஐ எனப்படும் உடல் கணக்கீடை, (உங்கள் எடையுடன் உங்கள் உயரத்தை (சென்டி மீட்டரில்) இரண்டு மடங்கால் வகுத்தால் கிடைப்பது) உங்கள் உடல்வாகு ஒல்லி (18க்கு கீழ்), சராசரி (19 முதல் 24), சராசரிக்கு அதிக உடல் வாகு (25 முதல் 29), பருமன் (30 முதல் 34), அதிக பருமன் (35 முதல் 39), மிக அதிக பருமன் (40க்கு மேல்) என வகைப்படுத்தி உங்கள் எடையைக் கூட்டவோ குறைக்கவோ மருத்துவ நிபுணரும், உணவியல் நிபுணரும், ஆலோசனை தருவார்கள்.
இடை அளவு
  இடுப்பு மற்றும் அதற்கு மேல் தொப்புள் மேலே வைத்து இடை, இடுப்பு அளவுகளைக் கணக்கிடுவார்கள்.  இதன் மூலம் எதிர்காலத்தில் வர இருக்கும், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம். உடல் பருமன் போன்ற வியாதிகளைப்பற்றித் தெரிந்துகொள்ளலாம். அவை வராமல் தடுக்க ஆலோசனை பெறலாம். இடையளவு கூடக்கூட ஆயுள் அளவு குறையக்கூடும்.
  ஆண்களுக்கு 90 செ.மீ.க்கு கீழும் பெண்களுக்கு 80 செ.மீ.க்கு கீழும் இருப்பது நலம்.
  மார்பு விரியும் தன்மையைப் பரிசோதித்து, நுரையீரல் நோய்கள், மார்பு எலும்பு வடிவம் (கூன், கோணல், குழிவு, பீப்பாய், குறுகிய அகன்ற மார்பு) ஆகியவற்றில்  ஏற்படும் வியாதிகளை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
வயிற்று ஸ்கேன்
  இரைப்பை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள், குடல், ரத்தக் குழாய்கள், சவ்வுகள், சிறுநீரப்பை, ப்ராஸ்டேட் சுரப்பி, கர்ப்பப்பை, என வயிற்றின் அனைத்து உள்உறுப்புகள் பற்றியும், அவற்றின், எடை, அளவு, அமைப்பு, ரத்த ஓட்டம், செயல்பாடு, 1 மி.மீட்டருக்கு மேல் உள்ள நீர்க் கட்டிகள், புற்று நோய், நோய்த் தொற்றுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய்
  வெறும் வயிற்றில் சர்க்கரை அளவு 110/மிகி க்கு கீழ் இருக்க வேண்டும். 110, 125 வரை இருந்தால் அடுத்த சில ஆண்டுகளில் உங்களுக்குச் சர்க்கரை வியாதி வர வாய்ப்பு உண்டு. வாழ்க்கை முறை மாற்றம், உடல் உழைப்பு, உணவு கட்டுப்பாட்டின் மூலம் அது வருவதை தற்காலிகமாகவோ முழுவதுமாகவோ தள்ளிப்போட முடியும்.
  126 அளவு இருந்தால், மீண்டும் ஒருமுறை வெறும் வயிற்றில் மற்றும் உணவு உண்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு பரிசோதித்து அதை உறுதிப்படுத்திய பிறகு வாழ்க்கை முறை, உடல்  உழைப்பு, உணவுக் கட்டுப்பாடு மற்றும் மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
கல்லீரல் பரிசோதனை
  கல்லீரலானது, குளுக்கோஸ், ஆல்புமின் புரதங்கள், ரத்தத்தை உறையவைக்கும் முக்கியப் பொருட்கள், மருந்துகளைச் செரிமானம் செய்து வெளியேற்றுதல், உணவில் கொழுப்புப் பொருள்களைச் செரிமானம் செய்தல், புரத, மாவு, கொழுப்புச்  சத்துக்களைச் சேர்த்துவைத்தல் போன்ற உயிர் காக்கும் மிக அத்தியாவசியமான பணிகளைச் செய்துவருவதால், கல்லீரல் செயல்பாட்டைப் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது. அதில் ஏதாவது நோய்த் தொற்று, சேதம், காமாலை, அறிகுறி இருக்கிறதா எனப் பரிசோதித்து அறிவார்கள்.
சிறுநீரகப் பரிசோதனை
  இரண்டு சிறுநீரகங்களின் அளவு, ரத்த ஓட்டம், செயல்திறன், உடலின் கழிவுகளை வெளியேற்றும் திறன் போன்றவற்றை, யூரியா, கிரியேட்டினின் பரிசோதனை மூலம் தெரிந்துகொள்வார்கள்.
கண்
 பார்வைத்திறன் குறைபாடுகளான கிட்டப் பார்வை, தூரப் பார்வை, நிறக் குருடு, மாலைக்கண் நோய், கண்புரை, விழித்திரைக் குறைபாடுகள், நாள்பட்ட சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் மூளையில் ஏற்படும் பாதிப்புகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.  
காது
  கேட்கும் திறன், சவ்வின் தன்மை, தலைச் சுற்றல், கிறுகிறுப்பு, தள்ளாட்டம், தொண்டையில் ஏற்படும் பாதிப்புகள், தொண்டை, மூக்கில் சதை வளர்ச்சி, நோய்த் தொற்றுக்கள் பற்றி ஆராய்ந்து சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்.
தோல்
  சொரி, சிரங்கு, தேமல், படை, அரிப்பு, தடிப்பு, நிறம் மாறிய இடங்கள், வெண்மை, கருமை, சிவப்புப் புள்ளிகள், மருக்கள், சொரசொரப்பான முதலை அல்லது மீன் செதில் போன்ற தோல், நிறம் மாறுதல், முகப்பரு, கால் ஆணி, போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகள் அனைத்திற்கும், தோல் நோய் நிபுணர் ஆலோசனை தருவார்.
ஸ்கேன்
சிடி ஸ்கேன் (CT Scan)
  சிடி ஸ்கேன் என்பது கம்ப்யூடட் டோமோகிராஃபி  (Computed Tomography scan) என்பதன் சுருக்கம். முப்பரிமாணம் உள்ள உறுப்பைப் பல கோணங்களிலும் படம் எடுத்து, அதை ஒருங்கிணைத்து, இரு பரிமாணப் படங்களாகத் தருவதுதான் சிடி ஸ்கேன் செய்யும் பணி.
  மென்மையான திசுக்கள், இடுப்புப் பகுதி, ரத்தக் குழாய்கள், நுரையீரல், வயிறு, எலும்புகள் மற்றும் மூளை போன்ற பகுதிகளில், அதிக அளவு விவரங்கள் தேவைப்படும் சமயத்தில், சிடி ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது.
  பலவகை புற்றுநோய்களையும், கட்டிகளையும் கண்டறிவதற்கு ஸ்கேன் பேருதவியாக இருக்கும். ஒரு கட்டியின் துல்லியமான அளவு மற்றும் இருப்பிடம், அது எந்த அளவுக்கு அருகில் இருக்கும் திசுக்களைப் பாதித்திருக்கிறது என்பன போன்ற விவரங்களை சிடி ஸ்கேன் மூலம் தெரியும்.
  உள்உறுப்புகள் மற்றும் ரத்தக் குழாய்களில் வீக்கமோ அல்லது கட்டிகளோ இருப்பதையும் சிடி ஸ்கேன் காண்பிக்கும்.
 கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் காயங்களோ, கட்டிகளோ இருந்தால் தெரிந்துவிடும். கதிரியக்கம் அளிக்க வேண்டிய இடத்தையும், பையாப்சி எனப்படும் திசு அகழ்வு செய்ய வேண்டிய இடத்தையும் துல்லியமாகக் காட்டிவிடும்.  
  புற்றுநோய், நிமோனியா மற்றும் மூளையில் அடிபட்டு ரத்தக் கசிவு, உடைந்துபோன எலும்புகள் போன்றவற்றை ஆய்வு செய்ய சிடி ஸ்கேன் சிறந்தது.
  எலும்பு நோய்கள், எலும்பு அடர்த்தி, மற்றும் முதுகெலும்பின் தன்மை ஆகியன தெரியவரும். பக்கவாதம், சிறுநீரகச் செயல் இழப்பு, போன்றவற்றுக்குக் காரணமான குறைபாடுள்ள ரத்தக் குழாய்களின் விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
  சிடி ஸ்கேன் மிக விரைவாகப் படங்களை எடுக்கும்.
எம்.ஆர்.ஐ.ஸ்கேன் (MRI Scan)
  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்பது மேக்னடிக் ரிசோனன்ஸ் இமேஜிங் (Magnetic Resonance Imaging) என்பதன் சுருக்கம். இதுவும் சிடி ஸ்கேன் போன்றதுதான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன.
எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் காந்தமும் ரேடியோ அலைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
  எலும்புகளையும் தசைகளையும் இணைக்கும் நாண்கள் எம்.ஆர்.ஐ.ஸ்கேனில்தான் தெரியும்.
  முதுகுத் தண்டுவட ஆய்வு, மற்றும் மூளைக்கட்டி போன்றவற்றிற்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சிறந்தது.
மகளிருக்கான சிறப்புப் பரிசோதனை பேப் பரிசோதனைகள் (Pap Tests)
  ஓரிரு நிமிடங்களில் பெண் உறுப்பு மற்றும் கர்ப்பப்பையின் திசுக்களைச் சேகரித்து ஆய்வு நடைபெறும்.
பெண்களுக்கு வரக்கூடிய கர்ப்பப்பைப் புற்றுநோய் மற்றும் இதர நோய்த் தொற்றுகளின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறியலாம்.
  21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
மேம்மோகிராம் (Mammogram)
  பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா எனக் கண்டறியும் பரிசோதனை இது. மார்பகத்தை எக்ஸ் ரே எடுத்துப் பரிசோதிப்பார்கள். வலி இருக்காது.
  40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. இப்படிப் பரிசோதித்துக்கொள்ளும் பெண்களில் சுமார் 10% பேருக்குத்தான் மேல்சிகிச்சை தேவைப்படும். அதிலும் மிகச் சிலருக்குத்தான் மார்பகப் புற்றுநோய் இருக்கும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் குணப்படுத்துவது எளிது.
கவனிக்க...
 அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஒரு பொது மருத்துவ நிபுணர் உங்களைப் பரிசோதித்து தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குவார்.
  உணவு ஆலோசகரின் பங்கு முழு உடல் பரிசோதனையில் மிகவும் முக்கியமானது. அநேகமாக எல்லோரும் அவரின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டியிருக்கும்.
முழு உடல் பரிசோதனை மூளைக்கு இல்லையா?
முழு உடல் பரிசோதனையில், எல்லாப் பரிசோதனைகளும் செய்கிறார்கள். ஆனால், மூளைப் பரிசோதனை மட்டும் ஏன் செய்வதில்லை? என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழதான் செய்யும்.
லட்சக்கணக்கானவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்து, அவர்களின் வாழ்க்கைமுறை மாற்றத்தின் மூலம் பலரது குடும்பங்களை உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து காப்பாற்றிவரும் கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர். ஏ.ஆர். விஜயகுமார் ''மூளை நன்கு செயல்படுபவர்கள் மட்டும்தான் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வார்கள்.'' என்றார்.
மருத்துவர் சொல்வதுபோல், எல்லோருமே சிந்தித்து செயல்படவேண்டிய முக்கியமான விஷயம் இது. நிச்சயம் ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும். நோய் வருமுன் காப்போம்.  செலவைக் குறைப்போம்.
- லதானந்த்,
படங்கள்: ஜெ.தான்யராஜூ
படங்கள் உதவி: பாரத் ஸ்கேன், ராயப்பேட்டை, சென்னை.

சட்டப்பூர்வ அறிவிப்பு நாமே தயாரிக்கலாமே!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
      
சட்டப்படிஅறிவிப்பு @
வழக்கறிவிப்பு @
சட்டபூர்வ அறிவிப்பு @
லீகல் நோட்டீஸ் @
நோட்டீஸ்
அனுப்ப வழக்கறிஞர் உதவி தேவையில்லை நீங்களே அதை அனுப்பலாம்

அதற்கு தேவை
வழக்கு பற்றிய தேவையான விபரங்களை சுருக்கமாக தெளிவாக தயாரித்து கொண்டு
எதிர்தரப்பிடம் நீங்கள் கோரும் பரிகாரம் பற்றி தெளிவாக குறிப்பிட்டு அனுப வேண்டும்
மிரட்டலாக இருக்க கூடாது
(நண்பருக்கு கடிதம் எழுதுவது போல் தான் சாதாரமாக ஆனால் சுருக்கமாக் தெவைப்படின் விரிவாக எழுத வேண்டும்)

வழக்கு போட்டால் வழக்கில் உங்களை பாதிக்குகின்ற உங்களுக்கு எதிரான தகவல்களை தவிர்க்க வேண்டும்
கடித தலைப்பில் "சட்டப்படி வழக்கறிவிப்பு அல்லது சட்டபூர்வ அறிவிப்பு அல்லது லீகல் நோட்டீஸ் " என்று ஏதாவது குறிப்பிடுவது பயண்தரும்
அஞ்ச்ல் சேர்நதற்கு ஆதராவாக ஒப்புகை கிடைக்கும் வகையில் ஒப்ப்கை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்ச்லில் விரைவு அஞ்சலி அனுப்புவது பாதுகாப்பானது ஒப்புகை சீட்டு வழக்கிற்கு அவசியம் தேவைப்படலாம்
இமெயில் அனுப்பலாம் சரியானதுதான் சட்ட பூர்வ தடையேதும் இல்லை பல வழக்குக்ளில் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது ஆனால் அதை அவர் பெறவில்லை பார்க்க வில்லை என்னடனுடைய மின்னஞ்சல் முகவரி அது இல்லை என்று வாதம் செய்து தப்பிக்க வழியுள்ளது
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
        
ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை?
ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.
ஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்?
அது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன?
வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 50 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.
இலகு ரக வாகனங்கள் என்றால் என்ன?
இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன்படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?
பேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா?
போக்குவரத்து வாகனங்கள் இயக்குவதற்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு.
சொந்த பயன்பாட்டுக்காக வாகனம் ஓட்டுபவர், வாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.
ஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன?
ஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.

பாஸ்போர்ட் எடுக்க!....

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
       
              பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?
ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா”Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo)
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும்,Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல்(Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்
. மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம்
. ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.
4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)

• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்

• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.

• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,

• மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப்

பிக்கலாம்.26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.
சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து கொள்ள :http://passport.gov.in/cpv/FeeStructure.htm
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expireஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்
அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

குறிப்பு: பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவில் பாஸ்போர்ட் ஆன்லைனில் அப்ளை செய்வது எப்படி, அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி, அப்ளை செய்த பாஸ்போர்ட் என்ன ஸ்டேட்டஸில் இருக்கு என்பதையும் பார்க்கலாம்.
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....அப்படியே உங்களது ஓட்டுகளையும் பதிவிட்டு செல்லுங்கள் நண்பர்களே..
http://passport.gov.in/
விசா பெற வழிகாட்டும் இனையத்தளங்கள்!........
வெளிநாட்டு பயணங்களைத் திட்டமிடும்போது எழக்கூடிய முக்கிய கேள்வி, விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை.
முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொருத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது.
குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.
இந்தத் தகவல்களை எல்லாம் தேடி இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம் (http://www.visamapper.com/) வலைத்தளம் அமைந்துள்ளது.
எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமல் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவலகளை இந்தத் தளம் தருகிறது. அதுவும் எப்படி.., அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைபடத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது.
இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளிர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞ்சள் வண்ணம் என்றால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.
ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிற்கான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம், நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான். அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே, பயனாளி எந்த நாட்டிலிருந்து விவரங்களைத் தேடுகிறார் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது.
உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது, இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?
அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, 'நான் இந்த நாட்டு குடிமகன்' என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று, இது ஒரு வழிகாட்டித் தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகாரபூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே விசாமேப்.நெட் (http://www.visamap.net/) எனும் வலைத்தளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கும், போக இருப்பவர்களுக்கும் இந்தத் தளங்கள் பயனுள்ளவைகளாக இருக்கின்றன

திருமணத்தை பதிவு செய்யுங்கள்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
        
திருமணத்தை பதிவு  செய்ய
தமிழ் நாடு திருமணச் சட்டம் – 2009ன்
படி திருமணம் நடந்த 90
தினங்களுக்குள்
திருமணத்தை பதிவாளர்
அலுவலகத்துக்குச் சென்று பதிவு செய்யவேண்டும்.
திருமணம் முடிந்து 90 நாட்களுக்குள்
பதிவு செய்தால் கட்டணம் ரூ.100/-
மட்டுமே.
திருமணம் முடிந்து 91 முதல் 150
நாட்களுக்குள் பதிவு செய்தால் அபராத
கட்டணம் ரூ.50/-ம் சேர்த்து மொத்தம்
ரூ.150/- செலுத்தவேண்டும்.
திருமணம் முடிந்து 150
நாட்களுக்கு பிறகு தமிழ்நாடு திருமணச்
சட்டம்-2009-ன்படி பதிவு செய்ய
முடியாது.
150 நாட்களுக்கு பிறகும்
பதிவு செய்யாதவர்கள் மீது அந்த
பகுதி பதிவாளர் குற்ற
நடவடடிக்கை மேற்கொள்ள வேண்டும்
என சட்ட விதி முறை வகுக்கப்பட்டுள்
ளது. எனவே இனி திருமணம்
செய்து கொள்ளும் அனைவரும் 90
நாட்களுக்குள்
இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொள்ளுங்கள்.
திருமணம் எங்கு நடந்ததோ அந்த
பகுதிக்கான பதிவாளர் அலுவலகத்தில்
மட்டுமே இச்சட்டப்படி திருமணத்தை பதிவு செய்ய
முடியும். (மூன்று வகையான
திருமணச் சட்டத்தில் திருமணம் நடந்த
பகுதி பதிவாளர் அலுவலகம்
அல்லது பெண் வீடு உள்ள
பகுதி பதிவாளர் அலுவலகம்
அல்லது மாப்பிள்ளை வீடு உள்ள
பகுதி பதிவாளர் அலுவலகத்தில்
பதிவு செய்து கொள்ளும் வகையில்
விதி முறை உள்ளது).
திருமணத்தன்று ஆணுக்கு வயது 21-ம்
பெண்ணுக்கு வயது 18-ம்
பூர்த்தியாகியிருக்க வேண்டும்.
திருமணம் நடந்ததற்கான ஆதாரமாக
கீழ்கண்ட ஏதேனும் ஒன்றை இணைக்க
வேண்டும்.
• திருமண பத்திரிக்கை.
• கோவில்/சர்ச்/பள்ளிவாசல் நிர்வாகம்
வழங்கிய திருமணம் நடந்ததாக
கொடுக்கும் ஆவணம்.
• திருமணம் நடந்ததிற்கான
வேறு ஆதாரங்கள் (நோட்டரி அபிடிவிட்,
போன்ற ஆவணங்கள்)
முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்கண்ட
ஒன்றில் ஏதேனும்
ஒன்று கொடுக்கப்படவேண்டும்.
• வாக்காளர் அடையாள அட்டை
• குடும்ப அட்டை
• ஓட்டுனர் உரிமம்
• பாஸ்போர்ட் அல்லது விசா
வயதுக்கான சான்றாக கீழ் கண்ட
ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க
வேண்டும்.
• பிறப்புச் சான்று
• பள்ளி – கல்லூரிச் சான்று
• பாஸ்போர்ட்/விசா
மூன்று சாட்சிகள் கையெழுத்திட
வேண்டும். சாட்சிகள் ஏதேனும்
ஒரு அடையாள அட்டை காண்பிக்க
வேண்டும்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கணவன்
-4, மனைவி 4 போட்டோக்கள் எடுத்துச்
செல்ல வேண்டும்.
தமிழ்நாடு திருமண பதிவுச்
சட்டம்-2009-ன் படி பதிவு செய்யத்
தனியாக விண்ணப்ப படிவம் உள்ளது.
http://www.tnreginet.net/english/
forms.asp என்ற இணைப்பிலிருந்து 4
பக்க விண்ணப்பத்தை பதிவிறக்கம்
செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருமணத்தை பதிவு செய்ய
புரோக்கர்கள் ரூ5 ஆயிரம் முதல் ரூ.10
ஆயிரம் வரை வாங்கிக் கொள்கிறார்கள்.
ரூ.100/- மட்டும்
செலுத்தி திருமணத்தை பதிவு செய்யுங்கள்.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
           பெண்களுக்கு முத்தான யோசனைகள் :-
++++++++++++++++++++++++++++++
+++++

* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.

* எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம்.

* எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்கா
மலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.

* பழைய சாக்ஸுகளைத் துடைப் பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.

* உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது.

* காலையில் செய்கிற காய்கறிகள் மீந்து விட்டனவா? பஜ்ஜி மாவில் அவற்றைக் கலந்து எண்ணெயில் போட்டுப் பொறித்தெடுத்தால் வித்தி யாசமான சுவையுடன் தூள் பஜ்ஜி கிடைக்கும்.

* கொசுவை விரட்ட உபயோகிக்கும் மேட் தீர்ந்து விட்டதா? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள். கொசு வராது.

* காரணமே இன்றி திடீரென வயிற்றை வலிக்கிறதா? உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண் ணீரைக் குடித்து விட்டால் வலி பறந்து விடும்.

* காலை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் கைக்குட்டை யைத் துவைக்க மறந்து விட்டீர்களா? அதை ஒரு முறை அலசி, சமைத்து வைத்துள்ள சூடான பாத்திரங்களின் மேல் சிறிது நேரம் பரப்பி வைத்து விடுங்கள். பட்டாகக் காய்ந்து விடும்.

* சைனஸ் தொல்லையால் படுக்கும் போது தலைவலிக்கிறதா? படுக்கும் போது தலையணையை ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றி விட்டு அதன் மேல் தலை வைத்துப் படுங்கள். வலி இருக்காது.

* ரசம் கொதித்து இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கறிவேப் பிலைப் பொடியைத் தூவி இறக் கினால் வாசனை ஊரைத் தூக்கும்.
தனியே கறிவேப்பிலை போட வேண் டிய அவசியமுமில்லை.

* மிக்சியில் மாவு அரைக்கும் போது அது சீக்கிரமே சூடாகி விடும். இதைத் தவிர்க்க, மாவில் கொஞ்சம் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.

* கூடியவரையில் சமையலை இரும்புப் பாத்திரத்திலேயே செய் யுங்கள். அதனால் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும்.

* அப்போதே அரைத்த தோசை மாவில் தோசை ஊற்றினால் கசக்கும். அதைத் தவிர்க்க அதில் மோர் கலப் பதற்குப் பதில் பழைய சாதத்துத் தண்ணீ ரைக் கொஞ்சம் கலந்து செய்யலாம்.

* தக்காளிப் பழங்கள் மீந்து விட்டால் அதை அரைத்து வடிகட்டி தோசை மாவுடன் சேர்த்து, கொஞ்சம் காய்கறி களை நறுக்கிப் போட்டு தோசையாக ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

* காலையில் செய்த உருளைக்கிழங்கு மசாலா மீந்து விட்டதா? அதை லேசாக சூடு படுத்தி, பிரெட் அல்லது பன் உள்ளே வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

* தேங்காய் சாதம் செய்கிறீர்களா? அத்துடன் வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு, காய்கறிகளையும் வதக்கிப் போட்டுச் செய்யலாம்.

* பூண்டு குழம்பு செய்யப் போகிறீர்களா? பூண்டை எப்படி உரிப்பது என்று மலைக்க வேண்டாம். முதல் நாள் இரவே பூண்டை ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அடுத்த நாள் உரிக்க சுலபமாக இருக்கும்.

* அரிவாள் மனையின் முகப்புப் பகுதி யில் ஒரு வெங்காயத்தைக் குத்தி வைத்து விட்டுப் பிறகு நறுக்கினால் கண்ணீர் வராது.

* புதினாவை மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி போன்றவை செய்தால் வித்தியாசமான சுவையுடனும், நிறத்துடனும் இருக்கும்.

* மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் மாதவிலக்காகும் போது முதல் மூன்று நாட்களுக்கு கொள்ளுக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். மாதவிலக்கும் முறைப்படும். உடலின் ஊளைச்சதைகளும் குறையும்.

* ரவை தோசை செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பை அரைத்துக் கலந்து செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

* பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி விட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவினுள் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.

* சீயக்காய் வாங்கி அரைக்கும் போது அத்துடன் சாதாரணமாகச் சேர்க்கும் பொருட்களுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யையும் போட்டு அரைக்க பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.

இயற்கை முறைக்கு மாறுவோம்!ஆரோக்கியமாக வாழ்வோம்!
 
நன்றி...

பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
     ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு...

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என பொத்தாம் பொதுவாக தெரிகிறதே ஒழிய, பெண்களுக்கு எப்போதெல்லாம் சொத்து கிடைக்கும்? என்னென்ன உரிமை இருக்கிறது என்று தெரிவதில்லை. பெண்களுக்கு இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட உரிமைகளைப் பற்றி இங்கே விளக்கமாக கூறுகிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

''பெண்களுக்கான சொத்துரிமைப் பற்றிய சட்ட விழிப்புணர்வு இன்னும் நிறைய பெண்களிடம் போய் சேரவில்லை. தங்களுக்குள்ள உரிமையை பெண்கள் தெளிவாக தெரிந்து கொண்டால் மட்டுமே அதற்காக போராட முடியும்.
பெண்களுக்கான சொத்து உரிமைகளை தருவது 1956-ல் நிறைவேற்றப்பட்ட இந்து வாரிசுச் சட்டப்படிதான்.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு 'இந்து பெண்கள் சொத்து சட்டம்' என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட 'இந்து வாரிசுச் சட்டம் 1956' பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது. உதாரணமாக ஒரு இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில் அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும். இதில் அனைவருக்கும் சமஉரிமை உண்டு. இந்த சட்டத்தின்படி இருக்கும் பெண்களுக்கான உரிமைகள் இதோ:

1.முன்பு பெண்கள் தனது தந்தை வசித்து வந்த சொந்த வீட்டில் பங்கு கேட்கும் உரிமை இல்லாமல் இருந்தது. ஆனால், 2005-ல் வந்த சட்டத் திருத்தத்தின்படி பெண்கள் தனது தந்தையின் வீட்டில் அவர் காலத்திற்குப் பிறகு பங்கு கேட்கும் உரிமை வழங்கப்பட்டது.
<p> </p>
2.ஒரு பெண் இறக்கும்போது அவள் பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளில் அவளின் கணவர் மற்றும் பிள்ளைகளுக்கு சமபங்கு உண்டு. ஒருவேளை அவளது கணவனும் இறந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு எத்தனை மகனும் மகளும் இருக்கிறார்களோ, அத்தனை பேருக்கும் சொத்தில் சமபங்கு உண்டு.

3.ஒரு பெண்ணுக்கு கணவனும் இல்லை, குழந்தைகளும் இல்லை எனில் அவளின் சொத்துக்கள் அனைத்தும் அவளின் பெற்றோருக்குச் செல்லும். ஒருவேளை அவளுக்கு பெற்றோரும் இல்லையெனில் அவளின் அப்பாவின் வாரிசுகளுக்கு அந்த சொத்துகள் போகும். அவர்களும் இல்லையெனில் அம்மாவின் வாரிசுகளுக்கு சொத்து செல்லும்.

4.கணவரோ, குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு அவளின் தாய் மற்றும் தந்தை மூலம் (அவர்கள் உயில் எழுதாதபட்சத்தில்) பரம்பரை சொத்து கிடைத்தால் அவளின் தந்தையின் வாரிசுகளுக்கு அந்த சொத்து கிடைக்கும்.

5.அதேபோல் கணவரோ அல்லது குழந்தையோ இல்லாத பெண்ணுக்கு, கணவர் மற்றும் மாமனார் மூலமாக சொத்து கிடைத்தால் (உயில் எழுதாதபட்சத்தில்) அது அவளின் காலத்திற்குப் பிறகு கணவரின் வாரிசுகளுக்குச் செல்லும்.

6.பெண்ணுக்கு சீதனமாக வரும் எந்த சொத்தும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே பார்க்கப்படும். சீதனமாக நகைகளோ, பாத்திரங்களோ, நிலமோ, வீடோ என அசையும் மற்றும் அசையா சொத்து எதுவாக இருந்தாலும் அது அவளின் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். சீதனமாக கொண்டு வந்த சொத்து அந்த பெண் கூட்டுக்குடும்பத்தில் இருந்தால்கூட அது அவளது தனிப்பட்ட சொத்துதான். அந்த சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கும் உரிமை அந்த பெண்ணுக்கு உண்டு.

7.பெண்களுக்கு உயில் மூலமாக கிடைக்கும் சொத்தும் தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். அதனை அவள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம்.

8. 2005 இந்து வாரிசு திருத்த சட்டத்தின்படி, 25.3.1989 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட ஒரு இந்து பெண் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர முடியாது. அதற்குபிறகு திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோரலாம். ஆனால், 25.3.1989 தேதிக்கு முன்பு சொத்து பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் பாகப்பிரிவினை கோரமுடியாது. ஒருவேளை சொத்து விற்கப்படாமலோ அல்லது பாகப் பிரிவினை செய்யப்படாமல் இருந்தாலோ உரிமை கோரலாம்.

9.ஒரு ஆண் இறந்துவிட்டால் உயில் இல்லாத பட்சத்தில் அவரது தனிப்பட்ட சொத்திற்கு அவரது மனைவி, ஆண்/பெண் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் தனி உரிமை உண்டு.இந்து திருமணச் சட்டத்தின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது ஒரு இந்து ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த திருமணம் சட்டப்படி செல்லாது. ஆனால், அதே சட்டத்தின் பிரிவு 16-ன்படி இரண்டாவது திருமணத்தின் மூலம் குழந்தை பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு அதன் தந்தையின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு. ஆனால், பூர்வீகச் சொத்தில் எந்த பங்கையும் உரிமை கோர முடியாது. எனினும், இந்த விஷயம் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.இரண்டாவது மனைவியின் குழந்தைகளுக்கு பூர்வீகச் சொத்தில் பங்கு கிடையாது என உச்சநீதிமன்றத்தில் ஒரு பெஞ்ச் சொல்லியுள்ளது. ஆனால், இன்னொரு பெஞ்ச் இதற்கு மறுக்கவே, தற்போது லார்ஜ் பெஞ்சிற்கு அனுப்பப்பட்டு பரிசீலனையில் உள்ளது.

10. இந்து கூட்டு குடும்பத்தில் எப்படி ஒரு ஆண் பிறந்ததும் அவனுக்கு அந்த குடும்பத்தின் சொத்தில் உரிமை உள்ளதோ, அதேபோல் அந்த வீட்டுப் பெண்ணுக்கும் பிறக்கும்போதே சொத்தில் உரிமை உள்ளது.இந்து பெண்களுக்கு சொத்தில் இருக்கும் உரிமைகள் மட்டும்தான் இதுவரை சொல்லி இருக்கிறேன். கிறிஸ்தவ மற்றும் இஸ்லாம் மதங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த சட்டங்கள் பொருந்தாது. முடிவாக, சொத்தில் பெண்களுக்கென சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளை யார் தடுத்தாலும் சட்டம் மூலம் அதை தாராளமாக எதிர்கொள்ளலாம்''

வியாழன், 19 ஜூன், 2014

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.குளிர்சாதனப்பெட்டியினை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கான  யோசனை

தெரிந்துகொள்வோம்
பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?
1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.
2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.
3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.
4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.
5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.
6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.
7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.
8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.
9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.
10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.
15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.
16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.
17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.
18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.
19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.
20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.


தனி மனிதன் உருவாக்கிய 1,360 ஏக்கர் காடு!
யார் இந்த மாமனிதர் ?!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 ! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .
1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் !!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்:
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். "இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் " என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் !!
இவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை பற்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.
மரங்கள் மட்டும் அல்ல:
தேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன...!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' !!
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.
இப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...!!
'மனிதருள் மாணிக்கம்' இவர்...! இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்... நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரைப் பற்றிப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


'அந்த நாட்கள் மீண்டும் வந்திடாதோ?'
----------------------------------------------------
1930- 1980வரை பிறந்த நம்மை போன்றவர்களை இக்கால ஜெனரேஷன் குழந்தைகள் என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே! WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF.
·தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம்தான்.
·எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.
·கிச்சன் அலமாரிகளில் 'சைல்டு புருஃப் லாக்' போட்டு இருந்ததில்லை.
·புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.
·சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டியதில்லை.
·பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.
·நாங்கள் விளையாடியது நிஜநண்பர்களிடம் தான் நெட்நண்பர்களிடம் இல்லை.
·தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.
·ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.
·அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.
·காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.
·சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.
·உடல் வலிமை பெற ஊட்டச்சத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.
·எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்
·எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர்.
அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.
·அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள "ஏலேய்ய்ய்.." என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.
·உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.
.·எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை
உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.
·எங்களிடம் செல்போன், டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.
·வேண்டும்பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.
·எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமூகச் செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.
·உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.
·நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம்; ஆனால் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.
·இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.
·இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது சொல்லுங்கள்

திங்கள், 16 ஜூன், 2014

மரியாதைக்குரியவர்களே
வணக்கம்.
              

வியாழன், 5 ஜூன், 2014

திருப்பூர் குமரன்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
  கொடிகாத்த திருப்பூர் குமரன்
எல்லோரும் புதைக்கப்படுவதில்லை சிலர் விதைக்கப்படுகிறார்கள் என்றொரு பொன்மொழி உண்டு. அதுபோல இவர் உடல் மறைந்தாலும் விடுதலைப் போராட்டகாலத்தில் இவருடைய மரணம் பலர் மனதில் விடுதலைப்போராட்ட வேட்கையை விதைத்துச் சென
்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் (04.10.1904) பிறந்தார். சட்டமறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவியது. திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் நடத்திய மறியல் போராட்டத்தில் தீவிரமாகக் கலந்துகொண்டு கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்கு தலைமையேற்றுச் சென்றார் குமரன். அன்று (11.01.1932) காவலர்களால் தாக்கப்பட்டு தலையில் தடியடிபட்டு இந்திய தேசியக் கொடியைக் கையில் ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் உயிர்துறந்தார். தன் உயிர் தன் உடலைவிட்டுப் பிரியும் வரை கொடியை துறக்காததால் இவரைக் கொடிகாத்த குமரன் என்று நாம் அழைத்துவருகிறோம்.

இன்று பலருக்குக் கிரிக்கெட் பார்க்கும்போது மட்டும்தான்
நாட்டுப்பற்று வெளிப்படுகிறது..
திரைப்படங்கள் பார்த்து, நடிகர்களிடம் பேட்டிகண்டு தான் சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம் குழந்தைகளிடம் சொல்வோம்...
திருப்பூர் குமரன் ஒரு விடுதலைப் போராட்ட தியாகி. நம்நாடு அன்று அடிமைப்பட்டுக் கிடந்தது இவரைப்போல பல தியாகிகளால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம் என்று.